கனவில் என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்கிறார் - பூசாரி மீது பெண் கொடுத்த விசித்திர புகார்

tamilnadu-samugam
By Nandhini Jun 25, 2021 09:56 AM GMT
Report

பீகார் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது மகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், கடந்த ஜனவரியில் பூசாரி பிரசாந்த் சதுர்வேதியை சந்தித்துள்ளார்.

அப்போது, அந்த சதுர்வேதி அந்த பெண்ணின் மகனுடைய உடல்நிலையை சரிசெய்வதற்காக ஒரு மந்திரத்தை கொடுத்து, சில சடங்கு முறையையும் செய்ய சொல்லியுள்ளார்.

ஆனால், அந்த பெண்ணின் மகன் 15 நாட்களுக்குப் பிறகு இறந்து விட்டார். இதனையடுத்து, திடீரென அப்பெண் உள்ளூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் ஒன்றை கொடுத்தார். சதுர்வேதி தொடர்ந்து தனது கனவில் வருவதாகவும், பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக அதிர்ச்சியான குற்றச்சாட்டை போலீசாரிடம் கூறினார்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், சதுர்வேதிக்கு எதிராக எழுத்துப்பூர்வமாக புகார் எங்களுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, சதுர்வேதியிடம் சென்று விசாரணை செய்தோம்.

ஆனால். அவர் அந்த பெண் யாரென்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும், அந்தப் பெண் தன்னை ஒருபோதும் சந்தித்ததில்லை என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து, சதுர்வேதிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்பதால், ஒரு பத்திரத்தை தாக்கல் செய்த பின்னர் அந்த பெண்ணை விடுவித்தோம் என்றனர். 

கனவில்  என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்கிறார் - பூசாரி மீது பெண் கொடுத்த விசித்திர புகார் | Tamilnadu Samugam