குடிக்க தாலி கேட்டு மிரட்டிய கணவன் - மறுத்த மனைவிக்கு நடந்த கொடூரம்!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகாபிரபு (25). இவருடைய மனைவி அகிலாண்டேஸ்வரி (22). இவர்கள் இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மகாபிரபு பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்.
கணவன் சரியாக வேலைக்கு போகாததால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மகாபிரபுக்கு குடிபழக்கம் அதிகம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மகாபிரபு குடித்துவிட்டு அகிலாண்டேஸ்வரியிடம் தங்க தாலியை கேட்டு தகராறு செய்தார். அதற்கு அகிலாண்டேஸ்வரி கொடுக்க மறுத்துள்ளார்.
உடனே ஆத்திரமடைந்து தனது தாய் ராமுத்தாய் (45), தம்பி அரவிந்த் குமார் (19) ஆகியோருடன் சேர்ந்து வீட்டின் கதவை அடைத்துக்கொண்டு அகிலாண்டேஸ்வரி அடித்து உதைத்தனர். பின்பு அகிலாண்டேஸ்வரி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.
தீ மளமளவென பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அகிலாண்டேஸ்வரி அலறினார். இவர் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
அகிண்டேஸ்வரியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லபட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அகிலாண்டேஸ்வரி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் மருத்துவமனைக்குச் சென்று அகிலாண்டேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். தன்னை தன் கணவன், மாமியார், கொழுந்தன் ஆகிய 3 பேரும் சேர்ந்து மண்ணென்யை ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்றதாக புகார் தெரிவித்தார்.
இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து அகிலாண்டேஸ்வரியின் கணவர் மகாபிரபு, மாமியார் ராமுதாய், கொழுத்தன் அரவிந்த் குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
