போலீசார் மீது சாக்கடையை அள்ளி வீசிய ஆசாமி - பின்பு நடந்த விபரீதம்!
கல்லத்திகுளம் பகுதியைச் சேர்ந்த அசோகன். இவர் தினமும் குடித்து விட்டு குடியிருப்புவாசிகளிடம் தகராறு செய்வது வழக்கமாக வைத்து வந்தார். வழக்கம் போல் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட அசோகன் மீது சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரை அடுத்து, உடனே, காவலர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஆசாமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது, மதுபோதையில் இருந்த அசோகன் காவலரை ஆபாசமாக திட்டி தீர்த்தான்.
கோபம் அடைந்த காவலர் கையை ஓங்கவே, அவன் பதிலுக்கு சாக்கடையை அள்ளி வீசினான். இதனையடுத்து, அந்த போதை ஆசாமி காவலரை அடிக்கப் போய்ந்ததோடு அல்லாமல், அவரது தலைக்கவசத்தை தூக்கி எரிந்து அலப்பறை செய்தான்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அசோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

The Crazy Truth: சிங்கத்துக்கே சவால் விடும் ஹனி பேட்ஜர்... சிக்கினால் 2 நிமிடத்தில் உயிர் இழப்பு உறுதி! Manithan
