சேலம் அருகே போலீசார் தாக்கியதில் மயங்கி விழுந்த நபர் பலி! வீடியோ வெளியானதால் பரபரப்பு

tamilnadu-samugam
By Nandhini Jun 23, 2021 07:52 AM GMT
Report

ஆத்தூர்- இடையப்பட்டி சோதனைச் சாவடியில் வெள்ளையன் என்ற முருகேசன் குடிபோதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் அவர் மயங்கிய கீழே விழுந்தார். மயங்கி கீழே விழுந்ததை மீட்டு உடனடியாக போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவர்கள் அவருக்கு தலையில் அடிப்பட்டதால் உயிரிழந்ததாக கூறினர். தற்போது அவர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.