நடுக்கடலில் சிக்கிய மீன் வயிற்றில் ஓபன் பண்ணாத விஸ்கி பாட்டில் - வீடியோ வைரல்!
tamilnadu-samugam
By Nandhini
சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோவில் கடல் நடுவே மீனவரின் வலையில் சிக்கிய மீனின் வயிறு பெரிதாக இருந்துள்ளது.
அதை, அங்கேயே அறுத்துப்பார்க்கிறார் மீனவர். வயிற்றுப் பகுதியை அறுத்துப் பார்த்தபோது, ஓபன் பண்ணாத ஃபுல் விஸ்கி பாட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அதை வெளியே எடுக்கிறார்.
மீன் வயிற்றிலிருந்து கிடைத்த விஸ்கி பாட்டிலை எடுத்துக் காட்டி, மீன் மட்டுமல்லாமல் விஸ்கியும் கிடைத்தது கூடுதல் சந்தோஷம் என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.