கிச்சுக் கிச்சு மூட்டியதும் குழந்தை போலச் சிரிக்கும் அதிசய மீன் - செம்ம வைரல் வீடியோ!

tamilnadu-samugam
By Nandhini Jun 22, 2021 01:16 PM GMT
Report

கிச்சு கிச்சு மூட்டினால் சிரிக்கும் மீன் ஒன்றின் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஜெஃப்ரி டாடர் என்ற மீனவர் அமெரிக்காவில் பாஸ்டன் மாகாணத்திற்கு உட்பட்ட கேப் கோட் வளைகுடா பகுதியில் மீன் பிடிக்க சென்றார்.

அப்போது அவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமான தோற்றம் கொண்ட மீன் ஒன்று அவரது வலையில் சிக்கியது.

அந்த மீன் குழந்தைப் போல மல்லாக்க படுத்துக்கொண்டு போஸ் கொடுக்கவே, ஜெஃப்ரி டாடர் அந்த மீனை கிச்சு கிச்சு மூட்டினார்.

அப்போது, அந்த மீன் குழந்தை சிரிப்பது போல வாயை திறந்து சிரித்தது பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்தது. பார்ப்பதற்கு அந்த மீன் சிரிப்பது குழந்தை போன்று இருந்தாலும், அந்த மீன் உயிருக்குப் போராடுவதாக சில பார்வையாளர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது உலகளவில் வைரலாகிக் கொண்டு வருகிறது.

கிச்சுக் கிச்சு மூட்டியதும் குழந்தை போலச் சிரிக்கும் அதிசய மீன் - செம்ம வைரல் வீடியோ! | Tamilnadu Samugam