தந்தையின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்த மகள் - அதிர்ச்சி சம்பவம்?
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்தவர் முருகன் (40). இவர் நாடக கலைஞர். இவரது மனைவி மஞ்சு (32). இவர்களுக்கு ஷர்மிளா (19) மற்றும் அபிநயா (17) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
மஞ்சு தையல் தொழில் செய்து வருகிறார். நேற்று நூல் வாங்குவதற்காக இளைய மகளுடன் திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டார். இதனால், வீட்டில் மூத்த மகள் ஷர்மிளா மட்டும் தனியாக இருந்து உள்ளார். நேற்று மதியம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த முருகன், மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மகள் பெண் முருகனை தாக்கி இருக்கிறாள். இருந்தாலும் முருகனை விடாமல் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகள் கீழே இருந்த அம்மிக்கல்லை எடுத்து முருகன் தலையில் போட்டுள்ளார். இதில் முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட ஏ.டி.எஸ்.பி கிரண்ஸ்ருதி மற்றும் கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil
அம்மாவான பின்னும் குறையாத இளமை... sleeveless ஜாக்கெட்டுடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் VJ அஞ்சனா! Manithan