துடிக்க துடிக்க கணவனின் கழுத்தை அறுத்த மனைவி - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

tamilnadu-samugam
By Nandhini Jun 22, 2021 09:27 AM GMT
Report

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. இவருடைய மனைவி நிரோஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கோதண்டபாணி இன்டீரியர் டெகரேஷன் செய்யும் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 19ம் தேதி கோதண்டபாணி தனது வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை மர்ம நபர் யாரோ கொலை செய்து விட்டு தப்பித்து விட்டதாக மனைவி நிரோஷா போலீசில் புகார் கொடுத்தார்.

உடனே புகாரை பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கோதண்டபாணியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, இந்த கொலையில் மனைவிக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். மனைவி நிரோஷாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, நிரோஷா தனது கள்ளக்காதலன் மணிகண்டன் என்பவரும் இணைந்து இந்த கொலையை செய்ததாக பகீர் தகவல் சொன்னார்.

துடிக்க துடிக்க கணவனின் கழுத்தை அறுத்த மனைவி - விசாரணையில் திடுக்கிடும் தகவல் | Tamilnadu Samugam

கோடம்பாக்கத்தில் கோதண்டபாணி மற்றும் நிரோஷா இருவரும் வசித்து வந்தபோது அப்பகுதியை சேர்ந்த டெய்லர் மணிகண்டன் என்பவருடன் நிரோஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்தனர்.

இதை கண்ட வீட்டின் உரிமையாளர் வெளிப்பக்கம் கதவை பூட்டி விட்டு கணவர் கோதண்டபாணிக்கு தகவல் கொடுத்தார். இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் கணவன், மனைவி பிரிந்து விட்டனர்.

இதனையடுத்து, உறவினர்கள் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சைதாப்பேட்டையில் வாடகை வீட்டில் குடியமர்த்தி உள்ளனர். இருப்பினும், மணிகண்டன் உடனான பழக்கத்தை நிரோஷா கைவிடவில்லை. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக் கட்ட இருவரும் முடிவு செய்தனர்.

இதனையடுத்து, கணவர் கோதண்டபாணி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, டெய்லர் மணிகண்னுடன் சேர்ந்து கணவர் துடிதுடிக்க கழுத்தை அறுத்துள்ளனர். கொலை செய்துவிட்டு நிஷோரா மீண்டும் தூங்குவது போல நடித்துள்ளார். கோதண்டபாணி கொலை வழக்கில் கள்ளக்காதலன் மணிகண்டனை, நிரோஷாவையும் போலீசார் கைது செய்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.