மகன் இறந்த வேதனை தாங்க முடியாமல் தாய் தீக்குளித்து தற்கொலை!
திருவாரூரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி குஞ்சாரம் (45). இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், மூத்த மகன் கடந்த ஏப்ரல் மாதம் சாலை விபத்தில் திடீரென உயிரிழந்தார். இதனால், மகன் இறந்த நாளிலிருந்து குஞ்சாரம் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
சிறிது நாட்களாக விரக்தியுடன் காணப்பட்டு வந்த அவர், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குஞ்சாரத்தை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குஞ்சாரம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் தாய் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil
