பாட்டியை பெருமைப்படுத்திய பேத்தி: யோகாவில் அசத்தி காட்டிய மறைந்த பத்மஸ்ரீ நானம்மாளின் வாரிசு!
இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு,பல்வேறு வகையான ஆசனங்களை செய்து மறைந்த பத்மஸ்ரீ நானம்மாள் பாட்டியின் கொல்லு பேத்தியான ஏழு வயது சிறுமி யோகா செய்து காட்டி அசத்தியுள்ளார்.
சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மறைந்த நானம்மாள் பாட்டி தனது தள்ளாத வயதிலும் யோகா செய்து பத்மஸ்ரீ வருது பெற்றார்.
இவருடைய மகள் வழி கொல்லு பேத்தி கனித்ரா (7). இச்சிறுமி சிறுவயது முதல் யோகா கலையை கற்க துவங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் கனித்ரா கலந்து கொண்டு, பேக்வார்டு பிரிவு யோகாவில் முதலிடம் பிடித்து பதக்கம் வென்றார்.
இந்நிலையில், சர்வதேச யோகா தினமான இன்று அனைவருக்கும் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தனது வீட்டிலேயே கண்டபேராண்டாசனம், பூர்ணகலாபசானம், திருவிக்ரமாசனம் போன்ற ஆசனங்களக செய்து காட்டி அசத்தியுள்ளார் கனித்ரா.
இது குறித்து கனித்ரா பேசுகையில், உலக அளவில் நமது பாரம்பரிய யோகாவின் பெருமையை கொண்டு சேர்க்கும் விதமாக யோகா செய்கிறேன். யோகா செய்தால் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்றார்.