சசிகலாவிடம் பேசியவரின் நிறுவனத்தின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு!

tamilnadu-samugam
By Nandhini Jun 21, 2021 06:03 AM GMT
Report

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சசிகலா ஆதரவாளர் வின்சென்ட் ராஜா நிறுவனத்தில் மர்ம நபர்கள் பெட்டோல் குண்டுகளை வீசியுள்ளனர். மேலக்காவனூரில் உள்ள தார் பிளாண்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் அங்கிருந்த கார் ஒன்று எரிந்து சேதமானது.

சில நாட்கள் முன்பு சசிகலாவில் போனில் பேசிய ஆடியோ வெளியானது இதனையடுத்து, வின்செண்ட் ராஜா அதிமுகவிலிருந்து அதிரடியாக தலைமை கழகம் நீக்கியது. அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிறுவனத்தின் மீது மர்ம நபர்கள் பெட்டோல் குண்டு வீசியுள்ளனர்.

சசிகலாவிடம் யாராவது பேசினால் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் எச்சரித்தனர். இதையும் மீறி பேசியதால் வின்செண்ட்ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

வின்சென்ட் ராஜா அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக இருந்தவர். இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வின்சென்ட் ராஜா நிறுவனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.