பேய் பிடித்து விட்டதாக சொல்லி 7 வயது குழந்தையை விடிய விடிய அடித்தே கொன்ற கொடூரம்!
tamilnadu-samugam
By Nandhini
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர்கள் திலகவதி (30 ), பாக்கியலட்சுமி (28 ), கவிதா (30 ). 7 வயது குழந்தைக்கு பேயை விரட்டுகிறேன் என்று கூறி குழந்தையை இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள்.
விடிய விடிய அடித்ததில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரையும் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.
குழந்தையை அடித்து துன்புறுத்தி கொலை செய்த கே.வி.குப்பத்தை சேர்ந்த இந்த மூன்று பெண்களிடமும் கண்ணமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.