திருமணமான 4 நாளில் உயிரிழந்த புதுப்பெண் - சோகத்திலும் பெற்றோர்கள் செய்த காரியம் கண்ணீரை வரவழைத்தது!
திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்துள்ளார். அவரது உடல் உறுப்புக்களை பெற்றோர்கள் தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்பவருடைய மகன் சங்கர்ராஜ் (27). இவர் சென்னையில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், திருச்சுழி அருகே உள்ள சுத்தமடம் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி மகள் முத்துமாரிக்கும் (24) கடந்த 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள், பந்தல்குடியிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டர் சைக்கிளில் சென்ற போது, நிலை தடுமாறி முத்துமாரி கீழே விழுந்துள்ளார்.
இதில், அவருடைய தலையில் பலமாக அடிபட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், முத்துமாரிக்கு நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.
இவ்வளவு துக்கத்திற்கு மத்தியில், அவரது கணவரும், முத்துமாரியின் பெற்றோரும் முத்துமாரியின் உடல் உறுப்புகளான சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றினை தானம் செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
