மாமாதான் வேணும்... அடம்பிடித்த அத்தை மகள்கள் இருவரை ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞன்!
இந்தியாவில் இளைஞர் ஒருவர் அத்தை மகள் இரண்டு பேரை காதலித்து ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானாவைச் சேர்ந்தவர் அர்ஜுன். இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். எங்கு தேடியும் வேலை கிடைக்காத காரணத்தினால் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இவர், தன்னுடைய அத்தை மகள்களான சுரேகா மற்றும் உஷாராணி இருவரையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில் ஒருவரை மட்டும் திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளார் அர்ஜுன். ஆனால், அத்தை மகள்கள் இரண்டு பேருமே அர்ஜுனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளனர்.
இதனால், வேறு வழியின்றி அர்ஜுனுக்கு மகளை திருமணம் செய்து வைக்க இரண்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆதிவாசிகளான இவர்களது பாரம்பரியமான வாழ்க்கை முறையை மாற்றி முதல் முறையாக இரு பெண்களையும் ஒரே மணமகனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற இந்த திருமணத்தில், இரண்டு பேருக்கும் தாலி கட்டிய அர்ஜுன், இப்போது மகிழ்ச்சியாக அவர்களுடன் வாழ்ந்து வருகிறார். அவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan
