குழந்தை வரத்திற்காக மாந்திரவாதியை அழைத்து வந்த கணவன் - பின்பு நடந்த கொடூரம்!
உத்திரப்பிரதேச மாநிலம், மீரூட் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 2 வருடங்களாக குழந்தை இல்லை. இதனால், இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து தனது நண்பரான மாந்திரவாதியான இஸ்மாயிடம் இது பற்றி கணவர் கூறியுள்ளார்.
இஸ்மாயில் தான் இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பத்தாக நண்பரிடம் கூறியிருக்கிறார். அதனையடுத்து, சில தினங்களுக்கு முன்பு, இஸ்மாயில் தம்பதியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது இஸ்மாயில் மந்திரம் செய்து கொண்டிருந்த போது, கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அந்தநேரத்தில், இஸ்மாயில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்பெண் கூச்சலிட்டு கத்தியபோதும், வெளியில் இருந்த கணவன் கதவை திறக்கவேயில்லை. பின்பு, இஸ்மாயில் வெளியே சென்ற பிறகு, அப்பெண் இது குறித்து தனது உறவினர்களிடம் நடந்ததைப் பற்றி கூறியுள்ளாள்.
உறவினர்கள், அப்பெண்ணை அழைத்துக் கொண்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரைப் பதிவு செய்த போலீசார் இஸ்மாயில் மற்றும் கணவர் இருவரையும் கைது செய்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்ய பெண்ணின் கணவர் அனுமதி அளித்ததாகவும், இதனால் குழந்தை பெற முடியும் என்பதால் இப்படி சம்மதம் தெரிவித்ததாகவும் தெரியவந்தது. இதனையடுத்து, இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
