தங்க முலாம் பூசி நகைகளை அடகு வைத்து ஏமாற்றிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது மோசடி புகாரால் பரபரப்பு!
சென்னை எம்.கே.பி.நகரைச் சேர்ந்தவர் கவிதா. இவர், அதே பகுதியில் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் கடந்த 12 வருடங்களாக மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்ற நபர் கடந்த மார்ச் மாதம் 26 கிராம் தங்கத்தை அடகு வைத்து, 83 ஆயிரம் ரூபாய் பெற்று சென்றார். அதன் பிறகு அவரது மனைவி ஹேமாவதி கடந்த ஏப்ரல் மாதம் 17 கிராம் அளவுள்ள தங்க நகையை அடமானம் வைத்து ரூ.55 ஆயிரத்தை பெற்றுச் சென்றார்.
இதனையடுத்து, வைத்த நகைகளுக்கு மாத வட்டி கட்டாத காரணத்தினால் பலமுறை அவர்களை தொடர்பு கொண்டு நகையை மீட்டுக் கொள்ள சொல்லி வந்தோம். ஆனால், அவர்கள் நகையை மீட்டு கொள்ளாததால் சந்தேகம் அடைந்து நகையை பரிசோதனை செய்தோம்.
பரிசோதனை செய்ததில் அனைத்து நகைகளும் தங்க முலாம் பூசப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தோம். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் சரவணகுமார் நாம் தமிழர் கட்சியில் பெரம்பூர் தொகுதி செயலாளராக உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
[85IFF[