Sunday, May 4, 2025

பட்டாகத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய 3 பேர் கைது!

tamilnadu-samugam
By Nandhini 4 years ago
Report

 திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவர் இருசக்கர வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டும் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 17ம் தேதி இவருக்கு பிறந்த நாள். இதனையடுத்து, நண்பர்கள் பிரவீன் குமார், சம்பா ஆகியோருடன் சேர்ந்து புழல் ஏரிக்கரையில் பிறந்தநாளை கொண்டாடினார்.

அப்போது, பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை டிக் டாக் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக பட்டாகத்தியில் கேக் வெட்டி சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அரவிந்தன், பிரவீன் குமார், சாம்பா ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களை கைது செய்த போலீசார் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 

பட்டாகத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய 3 பேர் கைது! | Tamilnadu Samugam