மாணவிகளிடம் புத்தகத்தில் ஆபாச படங்களை வரையச் சொல்லி உணர்வை தூண்டுவார் பாபா! நேரில் கண்ட மாணவி சாட்சி...

tamilnadu-samugam
By Nandhini Jun 20, 2021 05:20 AM GMT
Report

சென்னை, கேளம்பாக்கத்தில் 64 ஏக்கர் பரப்பளவில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகிறது. இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் இவரை செய்து செய்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி பொலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். சிவசங்கர் பாபாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிய சிவசங்கர் பாபா, எந்தவித பயமும் இல்லாமல் தனது இஸ்டம் போல் மாணவிகளிடம் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதற்கு பாபாவின் பெண் சீடர்களம் உதவியாக இருந்துள்ளனர் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மாணவிகளிடம் தனியாக நோட்டுப் புத்தகம் வாங்கி வரச்சொல்லி, ஆபாச படங்கள், அந்தரங்க உறுப்புகளை படமாக வரைய வைத்து காண்பிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியாகவும், அவ்வாறு ஓவியம் வரையும் மாணவிகளுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குவான் எனவும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

சிவசங்கர் பாபாவின் சொல்லைக்கேட்டு நடக்கும் பல மாணவிகள் தவறு என தெரியாமலேயே தவறான பாதைக்கு சென்றதாகவும், தன்னுடன் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் ஒரு நோட்டு முழுவதும் டம்மி பாபா சொன்னதுபோல் ஆபாசப் படங்களை வரைந்து வைத்திருந்ததாகவும், மாணவி ஒரு தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பெண் சீடர்கள் மூலம் மாணவிகளை வரவழைத்து மதுபானங்கள் கொடுத்து சிவசங்கர் பாபா பாலியல் சீண்டலில் ஈடுபடுவார் என அந்த மாணவி கூறியுள்ளார்.

தன்னுடன் பயின்ற இரண்டு மாணவிகள் சிவசங்கர் பாபாவுடன் இருந்ததை நேரில் பார்த்ததாக, பாதிக்கப்பட்ட மாணவி புகாரில் கூறியுள்ளது கொடூரத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் பாபாவுக்கு ஆதரவாக இருந்த பல பெண் சீடர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மாணவிகளிடம் புத்தகத்தில் ஆபாச படங்களை வரையச் சொல்லி உணர்வை தூண்டுவார் பாபா! நேரில் கண்ட மாணவி சாட்சி... | Tamilnadu Samugam