போலீசார் என கூறி முதியவரை நிர்வாணமாக்கி போட்டோ எடுத்த 3 பெண்கள் கைது!

tamilnadu-samugam
By Nandhini Jun 18, 2021 01:00 PM GMT
Report

யமுனா நகர் பகுதியில் அப்பா வயதில் இருக்கும் ஒரு முதியவருக்கு மூன்று பெண்களால் நடந்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் முதியவர் ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவருடைய மகன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவருடைய மகளுக்கு திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். மகன் வெளிநாட்டில் இருப்பதால் முதியவரிடம் நன்கு பணம் இருந்துள்ளது. இதை 3 பெண்கள் நோட்டமிட்டு வந்துள்ளனர்.

திடீரென போலீசார் உடையில் அப்பெண்கள் அந்த முதியவர் வீட்டில் நுழைந்தனர். வீட்டில் இருந்த முதியவரை ஆடைகளை கழற்றுமாறு மிட்டியுள்ளனர். பயந்து போன முதியவர் ஆடைகளை கழற்றியுள்ளார்.

பின்னர், அந்த முதியவரை நிர்வாணமாக போட்டோவும், வீடியோவும் எடுத்தனர். இந்த போட்டோவையும், வீடியோவையும் சமூகவலைத்தளத்தில் விடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள்.

ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டிய அப்பெண்கள், முதல்கட்டமாக 50 ஆயிரம் ரூபாயை முதியவரிடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் சென்றதும் முதியவர் இது குறித்து யமுனா நகர் காவல் நிலையத்தில் முதியவர் புகார் கொடுத்தார். இந்த புகாரை பதிவு செய்த போலீசார், முதியவரை மிரட்டி பணம் பறித்த 3 பெண்களையும் கைது செய்தனர். பின்பு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.