ஒரு மாம்பழ மரத்துக்கு காவலாக 6 நாய்கள்! அப்படி என்ன அந்த மாம்பழ மரத்தில் ஸ்பெஷல் இருக்கு?

tamilnadu-samugam
1 வருடம் முன்

மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜபல்பூரில் சங்கல்ப் - ராணி தம்பதியினர். இவர்களுக்கு பழத்தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர். அது எல்லா மரமும் போல சாதாரணமாக வளரும் என்று நினைத்தார்கள். 

ஆனால், அது அவர்களுக்கு பெரும் ஆச்சரியம் கொடுத்தது. அந்த மரக்கன்றுகள் அசாதாரண ரூபி நிற மாம்பழங்களாக வளர்ந்தது. பின்னர் தான் அது அரியவகை ஜப்பான் Miyazaki வகை மாம்பழங்கள் என தம்பதிக்கு தெரிய வந்தது. 

அந்த மாம்பழத்தில் அப்படி என்ன சிறப்பு என்றால், இந்த மாம்பரம் உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழ வகைகளில் ஒன்று. இதன் ஒரு கிலோ கிராமின் விலை ரூ 2 லட்சம் 70 ஆயிரமாகுமாம். 

சங்கல்ப் - ராணி தம்பதி பேசுகையில், கடந்த ஆண்டு எங்கள் தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் மாம்பழங்களை திருடி சென்று விட்டார்கள். இதனையடுத்து, நாங்கள் 4 காவலாளிகள் மற்றும் 6 நாய்களை காவலுக்கு வைத்தோம். 

ஒரு மாம்பழ மரத்துக்கு காவலாக 6 நாய்கள்! அப்படி என்ன அந்த மாம்பழ மரத்தில் ஸ்பெஷல் இருக்கு? | Tamilnadu Samugam

இந்தியாவில் இந்த வகை மாம்பழங்கள் விளைவது மிகவும் அரிது. சென்னைக்கு நாங்கள் முன்னர் மரக்கன்றுகள் வாங்க சென்ற போது நபர் ஒருவரை இரயிலில் பார்த்தோம். அவர் தான் இந்த மரக்கன்றுகளை முதலில் எங்களுக்கு கொடுத்தார்.

அதை குழந்தை போல பாதுகாத்து வளர்க்குமாறு சொன்னார். அது தான் பின்னாளில் Miyazaki வகை மாம்பழ மரமாக வளர்ந்தது. ஒரு பழத்தை ரூ. 21000 கொடுத்து விலைக்கு வாங்க பல பணக்காரர்கள் வருகிறார்கள். ஆனால் நாங்கள் அதை விற்கவில்லை, ஏனெனில் அதிக செடிகளை வளர்க்க பழங்களை பயன்படுத்துவோம் என்றார். 

மத்தியப் பிரதேச தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஆர்.எஸ் கடாரா கூறுகையில், பழத்தோட்டத்தை ஆய்வு செய்துள்ளோம். இந்த பழம் இந்தியாவில் அரிதாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். இது விலை உயர்ந்த மரம். ஏனெனில் அதன் உற்பத்தி மிகக் குறைவு தான். அதன் சுவை மிகவும் இனிமையானது என்றார். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.