‘எஜமான்’ பட பாணியில் கர்ப்பமாக இருப்பதாக பொய் கூறிய பெண் தற்கொலை
தமிழகத்தில் கர்ப்பமாக இருப்பதாக கணவனின் குடும்பத்தினரிடம் பொய்யாக கூறி நம்ப வைத்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மூலக்கடையைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்களாக குழந்தை இல்லை. இதனால், தினமும் கனிமொழியை அவர் மாமியார் திட்டி தீர்த்து வந்துள்ளார். இதனால், என்ன செய்வது என்று புரியாமல் இருந்த கனிமொழி தான் கர்ப்பமாக இருப்பதாக கணவனின் குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார்.
ஆனால், கணவர் ரஞ்சித்குமாருக்கு சந்தேகம் வந்ததால் மனைவிக்கு ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளார். அப்போது, அவர் கர்ப்பமாக இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், அவரும், குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்தனர்.
குடும்பத்தாருக்கு உண்மை தெரிந்துவிட்டதே என்ற பயத்தில் இருந்த கனிமொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.