நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக நாளை இரவு அமெரிக்கா செல்கிறார்!
tamilnadu-samugam
By Nandhini
நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனைக்காக நாளை இரவு அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார். அமெரிக்காவுக்கு செல்லும் ரஜினி 3 மாதம் அங்கு தங்க உள்ளார். மத்திய அரசு அனுமதி தந்ததையடுத்து, தனி விமானத்தில் அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.