திருமணம் செய்த மகனை கண்டித்த தாய்க்கு கத்திக்குத்து! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
மதுரையைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது கணவர் செல்லத்துரை. சில ஆண்டுகளுக்கு முன்னர் செல்லத்துரை உயிரிழந்து விட்டார். இந்நிலையில் தனது 3 ஆண் பிள்ளைகளை தாய் பாக்கியம் வளர்த்து வந்தார்.
இன்று காலை மூத்த மகன் குமார் 18 வயது முழுமையடாத சிறுமியை திருமணம் செய்து கொண்டான். இதற்கு தாய் பாக்கியம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகன், பாக்கியம் மற்றும் அவரது இளைய சகோதரன் நாகராஜையும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளான்.
இதிலிருந்து தப்பி வந்த தாய் மற்றும் இளைய மகன், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதைப் பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அதன் பின்னர், அவர்களை விசாரணைக்காக தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது குறித்து பாக்கியம் போலீசில் புகார் தெரிவித்தார். இந்த புகாரை பதிவு செய்த போலீசார், மூத்த மகன் குமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.