சண்டையில் 6 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த 15 வயது சிறுவன்!

tamilnadu-samugam
By Nandhini Jun 16, 2021 11:02 AM GMT
Report

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் தடியன். இவருடைய மனைவி செல்வவதி. இவர்கள் இருவரும் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு பிரசாந்த் (6) என்ற மகன் உள்ளான்.  

அதே பகுதியில் வசித்து வரும் சுபா என்பவரது மகன் கோடீஸ்வரன் (15). சுபாவிற்கு கணவர் இறந்து விட்டார். சிறுவர்கள் இருவரின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்று விட்டனர்.

அந்த நேரத்தில் கிருஷ்ணன்கோவில் பகுதியிலுள்ள தோப்பிற்கு பிரசாந்தை, கோடீஸ்வரன் அழைத்துச் சென்று விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட சண்டையில் பிரசாந்தை, கோடீஸ்வரன் கிணற்றுக்குள் தள்ளி விட்டு தப்பியோடிவிட்டான்.

வீட்டிற்கு திரும்பிய பெற்றோர்கள் பிரசாந்த் வீட்டில் இல்லாததால் அக்கம், பக்கத்தில் தேடி உள்ளனர். சிறுவனை தேடியபோது, கிருஷ்ணன்கோவில் தோப்பில் இருக்கும் கிணற்றில் பிரசாந்த் சடலமாக கிடந்துள்ளதைப் பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றிலிருந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான கோடீஸ்வரனை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சண்டையில் 6 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த 15 வயது சிறுவன்! | Tamilnadu Samugam