நடிகர் சந்தானத்தின் சொந்தக்கார பெண் கொலை விவகாரம் - திடுக்கிடும் தகவல்
நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் உடல் நசுக்கி கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
நடிகர் சந்தானத்தின் சொந்தக்கார பெண் ஜெயபாரதி. இவர் திருவாரூர் அருகே உள்ள கிடாரங் கொண்டான் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவரது கணவர் பெயர் விஷ்ணு பிரகாஷ். அமெரிக்க மாப்பிள்ளை.
கடந்த 2005-ல் இவர்களுக்கு கல்யாணம் ஆகி, அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கணவனுடன் ஜெயபாரதிக்கு ஏதோ பிரச்சனை வந்திருக்கிறது. அதனால், 3 வருஷத்துக்கு முன்பு, சண்டை போட்டுக் கொண்டு அமெரிக்காவில் இருந்து, திருவாரூரில் உள்ள அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.
ஒரு நாள் வீட்டுக்கு வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, ஏடிஎம்மில் பணம் நிரப்ப செல்லும் வண்டி மோதி அங்கேயே உடல் நசுங்கி இறந்துவிட்டார். இது விபத்து அல்ல கொலை என்று ஜெயபாரதியின் அண்ணன் போலீசாரின் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்த ஆரம்பித்தனர். நடிகர் சந்தானத்துக்கு இந்த விஷயம் தெரிந்தது. இதனையடுத்து, நடிகர் சந்தானத்தின் உதவியால் மாவட்ட எஸ்பியின் கவனத்துக்கும் விஷயம் கொண்டு செல்லப்பட்டது. போதிய ஆதாரங்களும் கிடைத்தது.
இதனையடுத்து, உடனடியாக மறுவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அப்போதுதான், சந்தேகப்பட்டபடியே இது கொலை என்று தெரியவந்துள்ளது. விவாகரத்து "அம்மா வீட்டுக்கு போ" என்று கணவர் துரத்திவிட்டதால், விவாகரத்து செய்ய முடிவுக்கு வந்துள்ளார் ஜெயபாரதி. அதனால் கணவர் விஷ்ணுபிரகாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதனால், விஷ்ணுபிரகாஷ் பார்த்து வந்த வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதான் விஷ்ணுபிரசாத்துக்கு ஆத்திரத்தை கிளப்பி உள்ளது. ஜெயபாரதியை கொல்ல கணவர் திட்டமிட்டுள்ளார். தன்னுடைய சொந்தக்காரர்கள் ராஜா, ஜெகன், செந்தில் குமார் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையை செய்ய முடிவு செய்தார். பழைய சரக்கு வேன் ஒன்றை 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தந்து வாங்கி உள்ளனர். பிரசன்னா என்பவரை டிரைவராக வேலைக்கு வைத்துள்ளனர்.
வேலை முடித்து ஸ்கூட்டியில் வீட்டுக்கு ஜெயபாரதி வந்து கொண்டிருந்தேபோது, சரக்கு வேன் பலமாக மோதியதில் பனைமரத்துடன் ஜெயபாரதியின் உடல் நசுங்கும் அளவுக்கு லாரியை இயக்கி கொண்டே இருந்துள்ளார்.
இவ்வளவும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, டிரைவர் பிரசன்னாவை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த ராஜா, ஜெகன், ஆகியோர் தலைமறைவாகி இருந்ததால், அவர்களையும் கைது செய்திருந்தனர். தற்போது, தீவிரமான முயற்சிக்கு பிறகு, செந்தில்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் அமெரிக்காவில் உள்ள விஷ்ணுபிரகாஷையும் விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.