மிகுந்த பயங்கரமான பச்சை பூஞ்சை நோய் கண்டுபிடிப்பு! மருத்துவர்கள் எச்சரிக்கை

tamilnadu-samugam
By Nandhini Jun 16, 2021 05:13 AM GMT
Report

மக்களால் கொரோனாவின் பகுதி 1, பகுதி 2ன்னு வைரஸ் பரவி வருகிறது. இந்த கொரோனா தாக்கத்தையே மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத சூழ்நிலையில் தற்போது கலர் கலராய் பூஞ்சை நோய் பரவி மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

கருப்பு பூஞ்சை நோய் உருவெடுத்து தற்போது நாடு முழுவதும் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக பீகாரில் சிலருக்கு வெள்ளை பூஞ்சை நோய் கண்டுபிடிக்கப்பட்டது.

கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை மிகப் பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வெள்ளை பூஞ்சை நுரையீரலை மட்டுமல்லாமல் நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, உள்ளிறுப்புகள் மற்றும் வாய் உள்ளிட்ட உடலின் பிற பகுதிகளையும் பாதித்து வருகிறது.

மிகுந்த பயங்கரமான பச்சை பூஞ்சை நோய் கண்டுபிடிப்பு! மருத்துவர்கள் எச்சரிக்கை | Tamilnadu Samugam

இதற்கு அடுத்தப்படியாக 3-வதாக மஞ்சள் பூஞ்சை நோய் உத்தரப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. நல்லவேளையாக இத்தகைய பூஞ்சை நோய்களுக்கு எதிரான மருந்துகள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. நாம் சுற்றுப்புறத்தை எப்போதுமே தூய்மையாக வைத்திருந்தாலே இதிலிருந்து தப்பித்து விடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், தற்போது 4-வது பச்சை பூஞ்சை நோய் உருவெடுத்துள்ளது. இந்நோய், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 34 வயதான ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து சமீபத்தில் மீட்ட அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பச்சை பூஞ்சை தொற்று ஏற்பட்டிருப்பதாக கண்டுபிடித்தனர்.

கொரோனாவால் அவரின் 90% நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நுரையீரலில் தான் பச்சை பூஞ்சை தாக்கி இருக்கிறது. இந்த பச்சை பூஞ்சை நோய் கருப்பு பூஞ்சையிலிருந்து சற்று வித்தியாசமானது. மூக்கு வழியே ரத்தம் கசிதல், அதிகமான காய்ச்சல் உள்ளிட்ட அபாய அறிகுறிகள் இதன்மூலம் ஏற்படும்.

அவர் அவசர சிகிச்சைக்காக விமானம் வழியாக மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். இவர் தான் நாட்டிலேயே பச்சை பூஞ்சை தொற்றாளர் என்பதால் அதன் பாதிப்பு எந்த அளவில் இருக்கும் என்பது தெரியவில்லை. ஆராய்ச்சியின் வழியாகவே கண்டறிய முடியும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியிருக்கின்றனர்.