திருமணத்திற்கு முதல் நாள் இரவு காதலி வீட்டிற்கு சென்ற காதலன் - பின்பு நடந்த சோகம்!
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், சொந்தமாக லாரி வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராதா என்ற திருமணமான பெண்ணிற்கும் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சதீஷ்குமாருக்கும், வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனால், கள்ளக்காதலியுடன் சதீஷ்குமார் கடந்த ஒரு மாதமாக பேசாமல் இருந்துள்ளார்.
நேற்று சதீஷ்குமாருக்கும், வேறொரு பெண்ணிற்கும் திருமணம் நடைபெற இருந்தது. இதை அறிந்த ராதா திருமணத்திற்கு முதல் நாளான இரவு சதீஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு உன்னிடம் பேச வேண்டும் என் வீட்டிற்கு வா என்று அழைத்திருக்கிறார்.
அதன்பின்னர், சதீஷ்குமார் நள்ளிரவு ராதா வீட்டிற்கு சென்றிருக்கிறார். பின்னர், அங்கேயே அவர் அயர்ந்து தூங்கிவிட்டார். அப்போது திடீரென எழுந்த ராதா, நன்கு தூங்கி கொண்டிருந்த சதீஷ்குமார் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனையடுத்து, சதீஷ்குமாரின் உடலில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. வலி தாங்க முடியாமல் அலறிக்கொண்டே சதீஷ்குமார் வெளியே ஓடி வந்துள்ளார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். மருத்துவமனையில் சதீஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராதாவை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ராதா கூறுகையில், சதீஷ்குமாருக்கும், எனக்கும் பல ஆண்டுகளாக கள்ள தொடர்பு இருந்தது. எங்கள் கள்ளக்காதலை கேள்விப்பட்ட என் கணவன் ஜெயக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகும் நாங்கள் இருவரும் தொடர்பில் இருந்து வந்தோம்.
இந்நிலையில், சதீஷ்குமாரக்கு, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்ததால், இனிமேல் சதீஷ்குமார் எனக்கு கிடைக்க மாட்டார் என்ற விரக்தி ஏற்பட்டது. சதீஷ்குமாரால் தான் நான் என் கணவரை இழந்துவிட்டேன். இதனால், சதீஷ்குமார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தேன் என்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்.