அழியும் விளிம்பில் பன்றி மூக்கு தவளை! கேரள மாநில தவளையாக அறிவிக்கப்படுமா?

tamilnadu-samugam
By Nandhini Jun 14, 2021 10:24 AM GMT
Report

பன்றி மூக்கு கொண்ட அரிய வகை தவளை இனமான ‘பர்ப்பிள்’இன தவளை ‘கேரள மாநில தவளை’யாக அறிவிக்க தற்போது கோரிக்கை எழுந்து வருகிறது.

உடல் பார்ப்பதற்கு ஆமை போல் உள்ளது. ஆனால், மூக்கு பன்றி மூக்கு மாதிரியாக இருக்கும் இந்த அரிய இன தவளை 2003ம் ஆண்டு கேரள மாநிலம் இடுக்கியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தவளையை டெல்லி பேராசிரியர் எஸ்.டி. பிஜூ கண்டுபிடித்தார். கேரளாவில் பிறந்த டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இவர் ‘உலகின் தவளை மனிதர்’ என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

வாழ்நாள் முழுவதும் பூமிக்கு அடியில் வாழ்கின்றன இந்த தவளைகள். மழைக்காலங்களில் மட்டும் வெளியில் வந்து இனப்பெருக்கம் செய்யுமாம். சில நாட்கள் மட்டுமே இத்தவளைகள் வெளியில் வாழுமாம். பின்னர் பூமிக்குள் சென்றுவிடுமாம்.

அழியும் விளிம்பில் பன்றி மூக்கு தவளை! கேரள மாநில தவளையாக அறிவிக்கப்படுமா? | Tamilnadu Samugam

வருடத்தில் இரண்டு வாரங்கள் மட்டுமே இந்த தவளையை பூமிக்கு வெளியே பார்க்க முடியும். இத்தகைய தவளையின் உடம்பு பெரிதாக இருக்கும். ஆனால், தலை சிறியதாக இருக்கும். இந்த தவளை 6-9 செ.மீ. நீளமும், 170 கிராம் எடை கொண்டது. பூமிக்கு அடியில் இருக்கும் புழு பூச்சிகளை தனது நீண்ட நாக்கினால் கவர்ந்து இழுத்து உணவாக இத்தவளைகள் சாப்பிடும்.

இந்த தவளையின் வாழ்க்கை முறை மர்மம் நிறைந்துள்ளது என்றும், முழுமையாக தெரிந்துகொள்ள முடியவில்லை என்றும் ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தவளையின் குடும்பத்தைச் சேர்ந்த தவளைகள் ஆப்ரிக்காவிலும், மடகாஸ்கர் தீவிலும் காணப்படுகின்றன.

கேரள மாநிலத்தில் பெரியாறு, புலிகள் சரணாலயத்திலும் தமிழகத்தில் ஆனைமலை புலிகள் சரணாலய பகுதிகளிலும் இந்த தவளை இனம் உள்ளது. இந்த தவளை மருத்துவ இனம் என்று கூறி, வேட்டையாடப்பட்டு வருவதால், இவ்வினம் அழிந்துபோகும் நிலை உள்ளது.

அழிந்து வரும் இனங்களின் பட்டியலிலும் இத்தவளை சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய அரிய இனத்தினை பாதுகாக்க, இந்த பர்ப்பிள் இன தவளையை, கேரள மாநில தவளையாக அறிவிக்க வேண்டும் என்று கேரள வனத்துறை அம்மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.