பேசிக்கொண்டிருக்கும் போதே பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரன்!
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஆதிரா (28). இவர் சமூக ஊடகங்களில் தன்னுடைய வீடியோவை வெளியிட்டு வருவது வழக்கம். இவருடன் இணைந்து அவரது கணவர் ஷானவாஸும் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், ஆதிரா பதிவேற்றிய ஒரு வீடியோவுக்கு பொதுமக்களில் ஒருவர் கமெண்ட் செய்தார். அந்த கமெண்ட்டால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷானவாஸ் ஆதிரா மீது மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்துள்ளார்.
அவரும் தீ கொளுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து, இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆதிரா பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையில் ஆபத்தான நிலையில், ஷானவாஸ் பொது அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆதிராவும், ஷானவாசும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு 3 மாதமேயான ஒரு கைக்குழந்தை உள்ளது. ஆதிரா ஏற்கனவே திருமணமாகி இரண்டு பி.ள்ளைகளுக்கு தாயார் எனவும், ஷானவாசுக்கும் முதல் திருமணத்தில் இரண்டு பிள்ளைகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.