சாகுபடிக்காக நீரைத் திறந்துவிட்டுள்ளேன் - சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - முதல்வர் வேண்டுகோள்
சிக்கனமாக நீரைப் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கம், பொதுமக்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அலையை திறந்து வைத்தார்.
இந்த கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் என மூன்று ஆறுகள், 36 கிளை ஆறுகள், 26 ஆயிரம் வாய்க்கால்கள் மூலம் டெல்டா மாவட்டங்களுக்கு பயன் கொடுக்கும். இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையை திறந்து வைத்த பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 3000 கன அடி நீரைத் திறந்துவிட்டுள்ளேன். வரும் மாதங்களிலும் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும். உழவர்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திட வேண்டும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் டெல்டா செழித்தால் தமிழ்நாடே செழிப்படையும் என்றார்.
மேட்டூர் அணை திறப்பின்போது, தமிழக முதல்வருடன், உடன் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.