மேட்டூர் அணையை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! விவசாயிகள் மகிழ்ச்சி
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு இன்று முதல் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் அருகில் ஊர் பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.77 ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த அணை நீரால், எல்லா பகுதிகளுக்கும் தேவையான அளவு தண்ணீர் கொண்டு சேர்க்க முடியும். இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அலையை திறந்து வைத்தார்.
இதனையடுத்து, கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் என மூன்று ஆறுகள், 36 கிளை ஆறுகள், 26 ஆயிரம் வாய்க்கால்கள் மூலம் டெல்டா மாவட்டங்களுக்கு பயன் கொடுக்கும். இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை திறப்பில் தமிழக முதல்வருடன், உடன் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.