தாம்பரம் அருகே மளிகை பொருள் போல கருப்பு பூஞ்சை மருந்து விற்ற 5 பேர் கைது!

tamilnadu-samugam
By Nandhini Jun 12, 2021 03:24 AM GMT
Report

தாம்பரம் அருகே கள்ள சந்தையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிகமாக பரவி வருகிறது.

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கருப்பு பூஞ்சை நோய்யால் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், சர்க்கரை நோயாளிகளை கருப்பு பூஞ்சை நோய் எளிதில் தாக்கி விடுகிறது. கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் கண்ணை பறி கொடுக்கும் ஆபத்தில் உள்ளனர். பலர் கருப்பு பூஞ்சையால் மரணமும் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தாம்பரம் அருகே கள்ள சந்தையில் கருப்பு பூஞ்சைக்கான மருந்தை விற்ற 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மருந்து விற்பனை செய்வதாக விளம்பரம் செய்த சரவணன் முதலில் கைது செய்யப்பட்டார்.

சரவணன் அளித்த தகவலின் பேரில் தனியார் மருத்துவமனைகள், மருந்தகத்தில் பணியாற்றிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சரவணன், அறிவரசன், விக்னேஷ், தம்பிதுரை, விக்னேஷ்குமார் ஆகிய 5 பேர் மளிகை பொருள் விற்பது போல கருப்பு பூஞ்சை மருந்தை விற்றது விசாரணையில் தெரியவந்தது. 5 பேருக்கும் கருப்பு பூஞ்சை மருந்து அளித்த முக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.