சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ஒரு அப்பாவி - தாய் ஆதரவு!

tamilnadu-samugam
By Nandhini Jun 11, 2021 12:44 PM GMT
Report

நடிகர் பேர்ல் வி பூரி ஒரு அப்பாவி என்று பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தாயும், நடிகையுமான ஏக்தா சர்மா தெரிவித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

2019ம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று பிரபல நடிகர் பேர்ல் வி பூரியை மும்பை போலீசார் கைது செய்தனர்.

பேர்ல் அப்படிப்பட்டவர் இல்லை என்று சில நடிகர்கள் பேர்ல் வி பூரிக்கு ஆதரவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தாயும், நடிகையுமான ஆர்த்தி பூரி என்பவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இது குறித்து ஆர்த்தி பூரி இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது -

கடந்த 10 ஆண்டுகளாக ஏக்தா சர்மா தன் திருமண வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். 2 ஆண்டுகளாக அவரின் மகள் அவருடன் இல்லை. ஏக்தா உள்பட நாங்கள் அனைவரும் பேர்ல் வி பூரிக்கு ஆதரவு கொடுக்கிறோம்.

விரைவில் அவருக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். மகளை தன்னுடன் வைத்துக் கொள்ள ஏக்தா சர்மா போராடுகிறார்.

இந்நிலையில் அவரின் கணவர் இப்படி ஒரு பிரச்சனையை உருவாக்கி, பழி போடுகிறார். நீதித் துறைக்கு முன்பு ஏக்தா சர்மாவின் பெயரை கெடுத்து, மகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே அவர் இப்படி செய்துள்ளார்.

நடிகர் பேர்ல் வி அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். அவருக்கு உங்களது ஆதரவு நிச்சயம் தேவை. பேர்ல் வி பூரி ஒரு அப்பாவி. தேவையில்லாமல் பேர்ல் மீது பழிபோடப்பட்டிருப்பதை ஏக்தா புரிந்து கொண்டுள்ளார்.

ஏக்தாவின் கணவர் அனில் எழுதிய கேவலமான திரைக்கதை இது. உண்மை வெளியே வரும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஆர்த்தி கூறியுள்ளார். ஆர்த்தியின் போஸ்ட்டை ஏக்தா சர்மா இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.