கண்ணில் மிளகாய் பொடி தூவி 22 நாட்களாக காதலியை கொடூரமாக துன்புறுத்திய சைக்கோ காதலன் கைது!

tamilnadu-samugam
By Nandhini Jun 11, 2021 12:15 PM GMT
Report

காதலியை 22 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து, கண்ணில் மிளகாய் பொடி தூவி பாலியல் வன்கொடுமை செய்த சைக்கோ காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திரிச்சூரைச் சேர்ந்தவர் மார்டின் ஜோசப். இவர் ஷேர்மார்க்கெட் தொழிலதிபராக உள்ளார். இந்நிலையில், கேரள மாநிலம் கன்னூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவருமே திருமணம் செய்து கொள்ளாமல் கொச்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால், இளம்பெண் காதலனுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

அப்பெண்ணுக்கு போன் செய்த மார்டின், நீ திரும்ப வராவிட்டால் நாம் இருவரும் இணைந்து எடுத்த நிர்வாண படத்தையெல்லாம் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதற்கு பயந்துபோன அந்த இளம்பெண் மீண்டும் கொச்சிக்கு சென்றுள்ளார். அப்போது தான் இந்த கொடூரம் நடந்துள்ளது.

இளம்பெண்ணை ஒரு மாதமாக வீட்டுக்குள் அடைத்துள்ளான் மார்டின். காதலியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி, உடம்பில் வெந்நீரை ஊற்றியுள்ளான் அந்த கொடூரக்காரன். தொடர்ந்து பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளான். எப்படியோ அங்கிருந்து தப்பித்த அந்த இளம்பெண், சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார்.

சொந்த ஊரில் உள்ள காவல் நிலையத்தில் மார்டின் மீது அப்பெண் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கண்ணில் மிளகாய் பொடி தூவி 22 நாட்களாக காதலியை கொடூரமாக துன்புறுத்திய சைக்கோ காதலன் கைது! | Tamilnadu Samugam

எர்ணாகுளம் மாவட்டம், காகநாட்டில் இருந்து திருச்சூருக்கு தப்பிச் சென்ற சைக்கோ இளைஞன் மார்ட்டின் ஜோசப்பை காட்டுக்குள் பொறுத்தப்பட்ட கேமிரா மூலம் கண்காணித்து 3 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சூரில் உள்ள பெரமங்கலம் என்ற இடத்தில் வனப்பகுதியில் வைத்து மார்ட்டின் கைது செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனுடன் தான்ர்ர்ஷ், ஸ்ரீராக், ஜான் ஜோய் ஆகிய மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை இன்று கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மார்ட்டின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சைக்கோ இளைஞன் மார்ட்டின் பிஎம்டபிள்யூ காரில் வலம் வந்து பல பெண்களை ஏமாற்றியுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.