2-வது தவணை ரூ.2,000க்கான டோக்கன் ரேஷன் கடையில் இன்று முதல் வழங்கப்படும்!

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண தொகை ரூ.2000 மற்றும் 14 வகையான இலவச மளிகை பொருட்கள் ரேஷனில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக கடந்த மே மாதம் ரூ.2000 வழங்கப்பட்டது. அதனையடுத்து, ஜூன் மாதமும் ரூ.2000 இரண்டாவது தவணையாக வழங்கப்படும் என்றும், அரிசியுடன் கூடிய 14 வகையான மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து, இன்று முதல் ரூ.2000 மற்றும் மளிகை பொருட்களுக்கான டோக்கன் வீடு வீடாக வழங்கப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் சென்று மக்கள் டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்