மாஸ்க்கை விழுங்கிய நாய் - போராடி உயிரை காப்பாற்றிய டாக்டர்கள்!

tamilnadu-samugam
By Nandhini Jun 11, 2021 04:46 AM GMT
Report

முகக்கவசத்தை விழுங்கிய நாய் ஒன்று உயிருக்கு போராடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கொரோனை தொற்று 2-வது அலை பரவி வருகிறது. இதனால், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது.

ஆனால், பயன்படுத்திய முகக் கவசத்தை முறையாக மக்கள் குப்பைத் தொட்டிகளில் போடுவது கிடையாது. இப்படி மாஸ்க் குப்பைத் தொட்டியில் போடாமல் கீழே போடுவதால், மற்றவர்களுக்கு தொற்று பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பிராணிகளும் தொல்லை அனுபவிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றன.

இந்நிலையில், சைபேரியன் ஹஸ்கி வகையை சேர்ந்த நாய்க்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த நாயை, அதன் உரிமையாளர்கள் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது அந்த நாய் வயிற்றில் முகக்கவசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாயின் வயிற்றில் இருந்த முகக்கவசத்தை எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். நாய்க்கு மயக்க ஊசி செலுத்தி வயிற்றிலிருந்து முகக்கவசத்தை அகற்றினார்கள். தற்போது நாய் நலமுடன் இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாஸ்க்கை விழுங்கிய நாய் - போராடி உயிரை காப்பாற்றிய டாக்டர்கள்! | Tamilnadu Samugam