சாராயம் என்று நினைத்து சானிடைசர் குடித்த நண்பர்கள் - 3 பேரில் ஒருவர் பலி!
அரியலூர் அருகே சாராயம் என நினைத்து சானிடைசர் குடித்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் ஆட்டோ டிரைவர். இவருக்கு மோகன், சரவணன் என்ற நண்பர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 7ம் தேதி இளங்கோவன், நண்பர்களான மோகன், சரவணனுடன் சேர்ந்து சாராயம் குடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது, சாராயணம் என நினைத்து சானிடைசரை 3 பேரும் குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் 3 பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு கீழே சரிந்த விழுந்துள்ளனர். உடனடியாக 3 பேரையும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இளங்கோவன் சிகிச்சை பலன் இல்லாமல் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், மோகன், சரவணன் இருவரும் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.