18 வருடமாக நைட்டி மட்டுமே போடும் ஆண் - காரணம் தெரிஞ்சா... அய்யோ... நீங்களே ஷாக் ஆயிடுவீங்க!
பெண்கள் தான் நைட்டி போடுவது வழக்கம். ஆனால், கேரளத்தில் ஒரு ஆண் 18 வருடமாக நைட்டி மட்டும் தான் போடுகிறாராம். ஏன் நைட்டி போடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் கூறிய காரணம் கேட்டால் வியப்பாய்டுவீங்க.
கொல்லம் மாவட்டம், கடைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் மேக்ஸி. இவரை அங்குள்ளவர்கள் நைட்டி மாமான்னுதான் கூப்பிடுகிறார்கள். மேக்ஸி மாமா அந்த ஏரியாவில் சாலையோர உணவகம் நடத்தி வருகிறார். இவரது இயற்பெயர் எகியா.
ஒருநாள் அவரது கடைக்கு ஒரு சப் இன்ஸ்பெக்டர் வந்திருக்கிறார். அவரை கவனிக்காத எகியா வழக்கம்போல் வேலைகளை பார்த்துள்ளார். அவரைக் கூப்பிட்ட சப் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரன் வந்து நிற்கிறேன். வேட்டியை மரியாதையாக இறக்கிவிடத் தெரியாதா? என கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டுள்ளார்.
உடனே கோபத்தில் விறு, விறுவென வீட்டுக்குப் போன எகியா, தன் வேட்டியை கழட்டி தூக்கி எரிந்துவிட்டு, நைட்டியை மாட்டிக் கொண்டுள்ளார். நைட்டி போட்டதும் அவருக்கு தெரிந்துள்ளது சவுகரியம். அவர் வேலை செய்யும்போது வேட்டி போல் மடித்து விடவேண்டியது இல்லை. அப்புறம் போலீஸைப் பார்த்ததும் வேட்டியை அவிழ்த்துவிட வேண்டியது இல்லை என்று கூறுகிறார் நைட்டி மாமா. எகியா 18 வருடங்களாக நைட்டி மட்டுமே அணிந்து வருகிறாராம்.