டீக்கடையில் ரூ.220க்கு விற்கப்பட்ட கொரோனா இறப்பு சான்றிதழ் - படுசூப்பரான வியாபாரத்தால் பரபரப்பு!
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களுக்கான இறப்பு சான்றிதழ் அருகே இருந்த ஒரு டீக்கடையில் ரூ.220க்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் தினமும் 15க்கும் மேற்பட்டோர் இறந்து வருகிறார்கள். அவர்களுக்கான இறப்பு சான்றிதழ் சுகாதாரத்துறையின் மூலம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இறப்பு சான்றிதழை பதிவு செய்யும் பணியில் சுகாதாரத்துறை ஆய்வாளர்களும், கணினி ஆப்பரேட்டர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் பதிவேற்றம் செய்யும் இறப்பு சான்றிதழை, அவர்கள் கொடுக்கும் ஐடியைக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் பதவிறக்கம் செய்யலாம்.
இந்நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனை அருகில் உள்ள டீக்கடையில் ரூ.220ஐ வசூலித்த பிறகே, இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து லேமினேட் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையால் இலவசமாக வழங்கப்படும் இறப்புச் சான்றிதழை, டீக்கடையில் காசுக்கு விற்கப்படுவதால், ஏழை, எளிய மக்கள் இதில் சிக்கியுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பேசுகையில், “எனது அம்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். ஆதார், குடும்ப அட்டை கொடுத்து இறப்பை பதிவு செய்தேன். அப்போது, அரசு மருத்துவமனை ஊழியர் அருகே உள்ள டீக்கடையில் இறப்புச்சான்றை பெற்றுக் கொள்ளும்படி கூறினர். அந்தக் கடையில் சென்று விசாரித்தபோது, ரூ.220 கொடுத்தால் இறப்பு சான்றிதழ் தருகிறேன் என்று கூறினர்.
நான் ரூ.220ஐ கொடுத்தேன். பின்னர், இறப்புச் சான்றிதழை, லேமினேஷன் செய்து கொடுத்தனர். லேமினேஷனுக்கு ரூ.20, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ரூ.30 கட்டணம். ஆகமொத்தம் ரூ.50 தான் வரும். ஆனால், டீக்கடையில் 220 என எப்படி பார்த்தாலும் ரூ.50தான் வரும். ஆனால், இவர்கள் ரூ.220 வாங்கியுள்ளனர் என வேதனையுடன் கூறினார்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இறப்புச் சான்றை எங்கு வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், டீக்கடையில் தான் வாங்க வேண்டும் என்று கூறவில்லை’ என்றார்.