கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது மகனை கொடூரமாக அடித்தே கொன்ற தாய் கைது!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து தனது 3 வயது மகனை கொடூரமாக அடித்து கொலை செய்த தாய் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ஜோடிமெட்லா பகுதியை சேர்ந்தவர் உதயா. இவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், உதயா வேறொரு நபருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
கள்ளக்காதலுக்கு மகன் இடையூறாக இருப்பதாகக் கருதி நேற்று அச்சிறுவனை தாய் உதயா கொடூரமாக தாக்கியுள்ளார். சிறுவனை தாக்கிவிட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார். ஆனால், அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அச்சிறுவனின் உறவினர்கள் போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர்.
உடனே வழக்குப் பதிவு செய்த போலீசார், உதயாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்காதலால் தனது 3 வயது மகனை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.