‘கொஞ்சமாவது எங்களையும் நினைச்சி பாருங்க’– போனில் அலறி அழுத துர்கா ஸ்டாலின்!

tamilnadu-samugam
By Nandhini Jun 08, 2021 10:21 AM GMT
Report

தமிழகத்தில் கடந்த இரு வாரத்திற்கு முன்னர் கொரோனா தொற்று அதிகமாக பரவியது. கொரோனாவிலிருந்து மக்களை மீட்டெடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

சென்னை, கோவை, மதுரை, தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதில், கோவை மாவட்டம்தான் சென்னையை முந்திச் சென்றுள்ளது. இதனையடுத்து, அம்மாவட்டத்தைக் கண்காணிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே கோவைக்கு நேரடியாகச் சென்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். 2-வது முறை மே மாதம் 30ம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வுகள் செய்தார். காலையில் திருப்பூர் சென்ற ஸ்டாலின் பின்னர் கோவைக்குச் சென்றார்.

கோவையில் 50 கார் ஆம்புலன்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார். இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போதுதான் கொரோனா வார்டுக்குள் நான் போக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் அப்படி சொன்னதும் அங்கிருந்த மருத்துவர்கள் அலறிவிட்டார்கள். முதல்வர் ஸ்டாலினின் வயதுக்கு கொரோனா வார்டுக்குள் செல்வது மிகவும் அபாயமானது என்றும், விளையாட்டான காரியம் இது கிடையாது.

‘கொஞ்சமாவது எங்களையும் நினைச்சி பாருங்க’– போனில் அலறி அழுத துர்கா ஸ்டாலின்! | Tamilnadu Samugam

இதனை பல முறை மருத்துவர்கள் ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால், தனது முடிவில் சற்றும் பின்வாங்க ஸ்டாலின் நான் உள்ளே போய்யே தீருவேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.

சாதாரண பிபிஇ கிட் தான் இப்போது கைவசம் உள்ளது. கூடுதல் பாதுகாப்புடன் கூடிய பிபிஇ கிட் கிடையாது என்று சொல்லி ஸ்டாலினை மருத்துவர்கள் தடுக்க நினைத்திருக்கிறார்கள். ஆனால், அவர் பிடிவாதமாய் இருந்துள்ளார். பின்னர் சாதாரண பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளை சந்தித்தள்ளார் தமிழக முதல்வர்.

இந்தத் தகவல் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுக்கு தெரியவந்தது. உடனே, முதல்வருக்கு போன் செய்தார். “எங்களையும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க” என்று கூறி அழுதுள்ளார்.

இது குறித்து ஸ்டாலின், மனைவிடம், “கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன். இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்” என்று கூறி சாமாதானப்படுத்தினாராம்.