ஏ.ஆர். ரஹ்மான் அணிந்திருந்த மாஸ்கின் விலை எவ்வளவு தெரியுமா? அந்த மாஸ்க்கில் அப்படி என்ன ஸ்பெஷல்?

tamilnadu-samugam
By Nandhini Jun 08, 2021 09:41 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பயங்கரமாக பரவி வருகிறது. எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் சமூகவலைத்தளத்தில் தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.

தற்போது அவர் அப்புகைப்படத்தில் அணிந்திருந்த மாஸ்க் பற்றி நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஏ.ஆர். ரஹ்மான் அணிந்திருந்த மாஸ்கின் விலை எவ்வளவு தெரியுமா? அந்த மாஸ்க்கில் அப்படி என்ன ஸ்பெஷல்? | Tamilnadu Samugam

ஏ.ஆர்.ரஹ்மான் அணிந்த அந்த மாஸ்கில் இரண்டு பக்கமும் சுத்திகரிப்பான் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.10,000க்கும் மேல் இருக்கும் என ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அப்புகைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் அணிந்திருந்த மாஸ்க் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சயின்ஸ் பிக்ஷன் படங்களில் வரும் ஹை-டெக் கேட்ஜெட் போல இருக்கிறதே, இது என்ன மாதிரியான மாஸ்க் என நாங்களும் ஆராய்ச்சியில் இறங்கினோம். இது உண்மையிலேயே ஹை-டெக் கேட்ஜெட்தான். எல்.ஜி நிறுவனத்தின் பியூரிகேர் வியரபிள் ஏர் பியூரிபைஃயரை (PuriCare Wearable Air Purifier) தான் இருவரும் அணிந்திருக்கின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் அணிந்திருந்த மாஸ்கின் விலை எவ்வளவு தெரியுமா? அந்த மாஸ்க்கில் அப்படி என்ன ஸ்பெஷல்? | Tamilnadu Samugam

அந்த மாஸ்க்கில் அப்படியென்ன ஸ்பெஷல் இருக்குன்னு தெரியுமா?

இதை மாஸ்க் என்று சொல்வதை விட ஒரு குட்டி ஏர் ப்யூரிஃபயர் என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். டெல்லி போன்ற பெருநகரங்களில் அதிகளவில் இருக்கும் காற்று மாசிலிருந்து தப்பிக்க இந்த ஏர் ப்யூரிஃபயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வீடுகளில் பயன்படுத்தப்படும் முழு வடிவ ஏர் ப்யூரிஃபயர்கள் போலவே இதுவும் செயல்படும்.

காற்றை வடிகட்டுவதற்காக இரண்டு H13 HEPA ஃபில்டர்கள் உள்ளன. எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் சுவாசிக்க ஒரு குட்டி ஃபேன் ஒன்று இருக்கும். எப்படி சுவாசிக்கிறோம் என்பதை கண்காணிக்க ஒரு ரெஸ்பிரேட்டரி சென்சார் கொடுத்துள்ளார்கள்.

அதில் கிடைக்கும் தகவல்களை வைத்து அதற்கேற்ப மேலே குறிப்பிட்ட ஃபேன் செயல்படும். இது எல்லாம் செயல்பட அதற்கான ஒரு குட்டி 820 mAh பேட்டரி வைத்துள்ளனர். 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும்.

இதனை அதிகபட்சமாக 8 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம். இதை கடந்த ஆண்டு இறுதியில் எல்.ஜி. நிறுவனம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.