Wednesday, May 14, 2025

குளுக்கோஸ் ஒயருக்கு பதிலாக பச்சிள குழந்தையின் விரலை துண்டித்த செவிலியர்கள்! அதிர்ச்சி சம்பவம்

tamilnadu-samugam
By Nandhini 4 years ago
Report

செவிலியர்கள் அலட்சியத்தால் பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையின் கை விரல் துண்டிக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்கள் செவிலியர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தனர்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் கைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் கட்டைவிரலை செவிலியர்கள் கவனக்குறைவாக துண்டித்துள்ளதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

குளுக்கோஸ் ஒயரை அகற்றுவதற்கு பதிலாக குழந்தையின் கைவிரல் துண்டித்ததாக பெற்றோர் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்காததால் தக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

குளுக்கோஸ் ஒயருக்கு பதிலாக பச்சிள குழந்தையின் விரலை துண்டித்த செவிலியர்கள்! அதிர்ச்சி சம்பவம் | Tamilnadu Samugam