காதலியை பார்க்க திருமணத்திற்கு மணமகள் வேடமிட்டு சென்ற காதலன் - வசமாக சிக்கித் தவித்த வீடியோ வைரல்!

tamilnadu-samugam
By Nandhini Jun 08, 2021 05:09 AM GMT
Report

இந்தியாவில் காதலியின் திருமணத்தில் காதலன், மணப்பெண் கோலத்தில் சென்று சிக்கிக் கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் Bhadohi பகுதியில் பெண்ணிற்கு பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. திருமண நாள் அன்று காதலியிடம் எப்படியாவது சென்று பேசி விட வேண்டும் என்று துடித்த காதலன்,

இந்த திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பெண் வேடமிட்டு திருமண மண்டபத்திற்கு சென்றிருக்கிறார். அச்சு அசல் மணப்பெண் போன்று வேடமிட்டு, சிவப்பு நிற சேலை, கழுத்தில் சில கவரிங் நகைகள், சரிகை முடி வைத்து அலங்காரம் பண்ணிக்கொண்டு திருமண வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

திருமண வீட்டிற்கு சென்ற இவர், அங்கிருந்த சிலரிடம் மணப் பெண் அறை எங்கே இருக்கு, எங்கே இருக்கு என்று கேட்டபடி இருந்திருக்கிறார். இதனால் ஒரு சிலருக்கு இவர் மீது சந்தேகம் வந்துள்ளது. இவரின் முகத்தை பார்க்க வேண்டும் என்று முற்பட்டபோது,

போலி முடி கீழே பட்டென விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து சராமரியாக திட்டித் தீர்த்தனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

காதலியை பார்க்க திருமணத்திற்கு மணமகள் வேடமிட்டு சென்ற காதலன் - வசமாக சிக்கித் தவித்த வீடியோ வைரல்! | Tamilnadu Samugam

காதலியை பார்க்க திருமணத்திற்கு மணமகள் வேடமிட்டு சென்ற காதலன் - வசமாக சிக்கித் தவித்த வீடியோ வைரல்! | Tamilnadu Samugam