“உனக்கு நல்ல சாவே வராது... நீ நாசமா போய்டுவ’ - பெண் போலீசை சாபம் விட்ட இஸ்லாமிய நபர்!

tamilnadu-samugam
By Nandhini Jun 07, 2021 10:24 AM GMT
Report

“உனக்கு நல்ல சாவே வராது... அல்லா மேலே சத்தியம்... நீ நாசமா போய்டுவ’ என்று கடமை செய்த பெண் போலீசை பார்த்து இஸ்லாமிய நபர் ஒருவர் சாபம் விட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர்த்து, வெளியே நடமாடி வருபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர். அதிலும், எந்தவித காரணமும் இல்லாமல் ரோந்து வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தும் அதிரடி காண்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அநாவசியமாக வெளியே வந்ததால், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த பெண் போலீஸை இஸ்லாமிய நபர் ஒருவர் வாய்க்கு வந்ததை போல வசை பாடி, சாபம் விட்ட சம்பவம் அடங்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும், காவல்துறை போன்ற பணிகளில் பெண்கள் ஆர்வத்துடன் இணைந்து சேவை செய்து வரும் நிலையில், இதுபோன்று அச்சுறுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.