தமிழகத்தில் இந்த 8 மாவட்டகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு -
வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வட தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும், தென்தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
மன்னார்வளைகுடா, மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல், கேரளா கடலோரப்பகுதி, இலட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.