6 லட்சம் இந்துக்களை மதமாற்றம் செய்ய வேண்டும் - மதபோதகர் மோகன். சி. லாசரஸின் வீடியோவால் பெரும் சர்ச்சை!
திருச்செந்தூர் பகுதிகளில் சுமார் 6 லட்சம் இந்துக்களை மதமாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபடுமாறு மிஷனரிகளுக்கு மதபோதகர் மோகன் சி லாசரஸ் உத்தரவிட்டுள்ள வீடியோவால் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளம்பி உள்ளது.
கிறிஸ்துவ மதபோகரான மோகன் சி லாசரஸ் ஜெபக் கூட்டம் என்ற பெயரில் மக்கள் கூட்டத்தைக் கூட்டி, மதமாற்றம் பற்றியும், இந்துக்களை பற்றி அவதூறாகவும் பேசுவதை வாடிக்கையாக கொண்டு வருகிறார்.
அதன்படி, அண்மையில், திருச்செந்தூர் பகுதியில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில், இந்துக்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்று மிஷனரிகளுக்கு மதாபோதகர் மோகன் சி லாசரஸ் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜின் சம்பத் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதம் மாற்ற நினைக்கும் சக்திகளுக்கு சட்டரீதியாக தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
*அர்ஜுன்சம்பத் கண்டனம்!
— Indu Makkal Katchi (Offl) ?? (@Indumakalktchi) June 5, 2021
*திருச்செந்தூர் தொகுதியில் சிறுவர் முதல் பெரியவர் வரை 6-லட்சம் இந்துக்கள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரையாக மதமாற்றம் செய்யுங்கள் மோகன்.சி.லாசரஸ் அதிரடி பேச்சு...* pic.twitter.com/W012UzGxlM