PSBB School விவகாரம் - பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி சொன்ன பகீர் உண்மைகள்!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னை கே.கே.நகரில் செயல்படும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. மாணவிகளிடம் அநாகரிகமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப்பில் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மாணவிகள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
ஆசிரியர் ராஜகோபலன் மீது போக்சோ சட்டப்பிரிவு, 354(ஏ)- பாலியல் தொல்லை, தொழில் நுட்ப சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
ராஜகோபானால் வழக்கில் நிறைய புகார்களை சேகரித்து, தமிழக காவல் துறையில் சமர்பித்த முன்னாள் மாணவியான சவுக்யாவுடன் ஒரு நேர்காணல் -