காயிதே மில்லத் நினைவிடத்தில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை!
tamilnadu-samugam
By Nandhini
தமிழகத்தில் இன்று காயிதே மில்லத் 126வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்திற்கு அதிமுக சார்பில் ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோர் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்கள். இதற்கு முன்னதாக இன்று காலை அவருடைய நினைவிடத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும், மதிமுக தலைவர் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடதக்கது.