கொரோனா வார்டுக்கு சென்று போலீசாரை நலம் விசாரித்த சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால்!

tamilnadu-samugam
By Nandhini Jun 05, 2021 04:13 AM GMT
Report

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கவச உடை அணிந்து சென்று கொரோனா வார்டில் நலம் விசாரித்தார் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த மாதம் 10ம் தேதி முதல் தமிழக அரசு முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

தமிழக முதல்வர் முன் களப்பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கொரோனா கவச உடை அணிந்து நோயாளிகளை சந்தித்தார்.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறை மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்று தனியாக கொரோனா சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு 82 காவலர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கவச உடை அணிந்து அங்கு சென்று நலம் விசாரித்துள்ளார். விசாரித்ததோடு அல்லாமல் அவர்களுக்கு பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சத்துணவு தொகுப்பினையும் கொடுத்துள்ளார். அதேபோல் சென்னை எழும்பூர் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலர்களையும் நேரில் சந்தித்துள்ளார்.